Tuesday 11 June 2013

சிங்கப்பூரின் குவிமாட மலர்த்தோட்டம்

முனைவர் நா.இளங்கோ
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி-8

கடந்த மே திங்கள் முதல் வாரத்தில் சிங்கப்பூர் மக்கள் கவிஞர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பட்டுக்கோட்டையார் விழாவில் (1-5-2013) மக்கள் மக்கள் கவிஞரும் மருதகாசியும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிவிட்டு 12-5-2013 ஞாயிறன்று கவிமாலை மற்றும் தமிழ் இலக்கியக் களம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கவிஞர் கி.கோவிந்தராசுவின் நூல் வெளியீட்டு விழாவின் இலக்கியப் பேருரைக்காகக் காத்திருந்த வேளையில் (இடையில் மலேசியா, சிங்கப்பூரில் வேறு மூன்று நிகழ்ச்சிகள்) மெரீனா பே வில் உள்ள கார்டன்ஸ் பை தி பே சென்று சிங்கப்பூரின் குவிமாட உள்ளரங்க மலர்த்தோட்டத்தினைக் கண்டு மகிழ்ந்து கையோடு என் கோமிராவில் சிறைபிடித்துக் கொண்டுவந்த வண்ண வண்ண மலர்களின் அணிவகுப்பு.

மலர்க்காட்டின் சில காட்சிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு







சிங்கப்பூரின் குவிமாட மலர்த்தோட்டம்
மூன்று ஏக்கரில் அமைந்துள்ள அமைந்துள்ள உள்ளரங்கத் தோட்டம். முற்றிலும் குளிரூட்டப்பட்டது.125 அடி உயரமுள்ள கண்ணாடிக் கூண்டின் உள்ளேதான் உலகின் அழகழகான தோட்டங்கள்.










1. ஆஸ்திரேலிய மலர்த்தோட்டம்
2. தென் ஆப்பிரிக்க மலர்த்தோட்டம்
3. தென் அமெரிக்க மலர்த்தோட்டம்
4. மத்தியத் தரைக்கடல் மலர்த்தோட்டம்
5. கலிபோர்னிய மலர்த்தோட்டம்
என உலகின் பன்னாட்டு மலர்த்தோட்டங்கள்.
இந்த வசந்தகாலச் சிறப்புத் தோட்டம் துலீப் மலர்க்காடு.





யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்களின் இலக்கியக்களம் - நூல் அணிந்துரை

  முனைவர் நா . இளங்கோ கவிதை இரசனை , இது படைப்புக்கு இணையானதோர் முருகியல் செயற்பாடு . என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவ...